மருத்துவம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை இரண்டு மணி நேரத்தில் ஈரோட்டிற்கு கொண்டு வந்து உறுப்புகளை தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை மூலம் செய்து உயிரை காப்பாற்றி யுள்ளனர்

ஊட்டியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை இரண்டு மணி நேரத்தில் ஈரோட்டிற்கு கொண்டு வந்து உறுப்புகளை தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை மூலம் செய்து உயிரை காப்பாற்றி யுள்ளனர்.தமிழகம் இந்திய அளவில் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சையில் முதல் இடத்தில் இருந்து வருவதாக மருத்துவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்… ஊட்டியில் அர்ஜுன் என்பவர் வீட்டில் மயங்கி விழுந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் குடும்பத்தினர் வேண்டுகோள் இனங்க உயிரிழந்த வரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.இதற்காக மாநில உடல் உறுப்புகள் தானம் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்து பல்வேறு இடங்களில் உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக தேவையெனில் ஊட்டியில் இருந்து காவலர் வாகனத்துடன் ஊட்டியில் இருந்து ஈரோடு வரை எந்த சிக்னல் நிற்காமல் இரண்டு மணி நேரத்தில் ஈரோட்டிற்கு கொண்டு வந்து உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டது.இது குறித்து அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன் கூறுகையில் தமிழகம் இந்திய அளவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் கடந்த 7வருடங்களாக முதல் இடத்தில் இருந்து வருவது பெருமித தக்க ஒன்று என்றார்.அதே நேரத்தில் மூளைச்சாவு அடைந்த அர்ஜூனின் கல்லீரல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபருக்கும்,கரூரை சேர்ந்த பெண்ணுக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.இந்த அறுவை சிகிச்சை அரசு காப்பீடு திட்டத்தின் மூலம் செய்யப்படுவதாக கூறிய மருத்துவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 22லட்சம் ரூபாயும்,சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு 4லட்சம் ரூபாய் செலவாகும் என கூறினார். சென்னை கோவை போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தப்படியாக ஈரோடு போன்ற நகரங்களில் இதுவரை 10கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள் உடல்களை தகனம் செய்யாமல் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கும் வகையில் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மேலும் மாநில உடல் உறுப்புகள் ஆணையத்தின் மூலம் ஒளிவுமறைவு இல்லாமல் அரசின் ஒப்புதலோடு உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது