மருத்துவம்

சுவாசக்குழாயில் சிக்கிய முந்திரி : குழந்தையை காப்பாற்றிய சுதா மருத்துவமனை

ஈரோட்டில் சுவாசக்குழாயில் முந்திரி பருப்பு சிக்கி உயிருக்கு போராடிய 1 வயது குழந்தையை ஈரோடு சுதா மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
அறச்சலூர் அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட, உடனடியாக பெற்றோர் அக்குழந்தையை அவர்கள் வழக்கமாக மருத்துவம் பார்க்கும் டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். குழந்தைக்கு மூச்சுத் திணறல் தொடர்ந்து இருக்கவே,அக் குழந்தைக்கு சி.டி.ஸ்கேன் பரிசோ தனை செய்யப்பட்டது. அப்போது சுவாசக்குழாயின் இடது பக்க குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறைரோட்டில் உள்ள சுதா பல்துறை மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. சுதா மருத்துவமனையின் காது-மூக்கு- தொண்டைதுறை குரல்வளை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கவின்குமார் விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்தார். அவருடன் தலை- கழுத்து சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபக் விசாகன், குழந்தைகள் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் டாக்டர் கவுரி சங்கர், டாக்டர் ரங்கேஷ் மற்றும் மருத்துவக்குழுவினர் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். சுவாசக்குழாய் அடைப்பு காரணமாக நுரையீரலின் ஒரு பகுதி வீக்கம் அடையத் தொடங்கி இருந்தது. எனவே சிகிச்சையை உடனடியாக தொடங்கிய டாக்டர்கள் குழு வினர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சுவாசக்குழாயில் அடைத்திருந்த பொருளை வெளியே எடுத்தனர். அது சுமார் 1½ செ.மீட்டர் நீள முள்ள உடைந்த முந்திரி பருப் யாகும். அதை வெளியே எடுத்த பிறகே குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. சிகிச் சையின்போது மயக்க மருந்து நிபுணர் டாக்டர் பாலாஜி உடன் இருந்தார்.
இதுகுறித்து குரல்வளை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கவின்குமார் கூறும் போது, ”குழந்தை முந்திரி பருப்பை விழுங்கியதை பெற் றோர் கவனிக்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக உடனடியாக டாக்டரிடம் அழைத்துச்சென்றனர். எனவேதான் சுவாசக்குழாய் அடைப்பு கண்டறியப்பட் டது. பொதுவாக, 9 மாதம் முதல் 5 வயது வரையான குழந்தைகள் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட் டுவிடும். எனவே குழந்தை களை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் நடமாடும் இடத்தில் ஆபத்தான பொருட்களை வைக்கக்கூடாது. அவை மிகுந்த ஆபத் தானது”என்றார். இம்மருத்துவக்குழுவினருக்கு சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.சுதாகர் பாராட்டு தெரிவித்தார்