சென்னிமலையில் போக்குவரத்து விதிகளை மீறிய 30 வாகனங்களுக்கு பெருந்துறை போக்குவரத்து போலீசார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வெடிச்சத்தம் எழுப்பிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து அதிகம் உள்ள சென்னிமலை நகர பகுதியில் வேகமாக செல்லும் சில வாகனங்களால் காரணமாக அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடைபெற்று வந்தது. விபத்துக்களை தடுக்கும் வகையிலும், வாகனங்களை கண்காணிக்கும் வகையிலும் பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் நேற்று சென்னிமலை நகர பகுதியில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சென்ற 30-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சென்னிமலை தெற்கு ராஜ வீதி வழியாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் சைலன்சர் (புகை போக்கி) மூலம் வெடி சத்தத்தை எழுப்பபியடி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளுக்கு வேறு சைலன்சர் வாங்கி வந்து பொருத்திய பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்ல அந்த வாலிபரை அனுமதித்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையிலும் சென்னிமலை குமரன் சதுக்கத்திலிருந்து பஸ் நிலையம் செல்ல வடக்கு ராஜவீதி மற்றும் கிழக்கு ராஜவீதி வழியாக செல்ல வேண்டும் என்றும், குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக எந்த வாகனங்கள் சென்றாலும் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அதேபோல் குமரன் சதுக்கம் பகுதியில் இருந்து மலை கோவிலுக்கு செல்பவர்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லாமல் வடக்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக செல்லலாம் என்றும் பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தெரிவித்தார்
வெடிச்சத்தம் எழுப்பி ஓட்டி சென்ற புல்லட்டை பறிமுதல் செய்த போலீசார்
Shares: