கல்வி

வேளாளர் கல்லூரில் கருத்தரங்கு தொடக்க விழா

  ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், “தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் TNSCSTயின் நிதியுதவியுடன் ஆறு நாட்கள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. விழாவை, ஈரோடு மாயா பஜார் உணவகத்தின் நிர்வாக பங்குதாரர் டாக்டர் பி.நந்தகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார்.
விழாவில், வேளாளர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் எம்.யுவராஜா வாழ்த்துரை வழங்கினார்.  வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எம்.ஜெயராமன் உரையாற்றினார்.