இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் நடந்து வருகிறது. பள்ளி, குறுவள , வட்டார, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கான மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 5, 6-ல் 9 -ம் வகுப்பு, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவிகளுக்கான மாநில கலைத் திருவிழா போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஒருவர் அல்லது ஒரு குழு மட்டுமே மாநில போட்டியில் பங்கேற்கும். அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கு தனித்தனியே போட்டு நடத்தப்படும். போட்டிக்கான மேடை அமைப்பு, ஒலி- ஒளி அமைப்பு, பேனர், தண்ணீர், உணவு, டீ, தங்குமிட செலவீனம், நடுவர் மதிப்பூதியம், இதர செலவினங்களுக்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் மாணவ – மாணவிகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான இடம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் கலை திருவிழா
Shares: