ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 7வது வார்டில் பகுதி சபைக் கூட்டம் , ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் சாபிரா பேகம் முத்துபாவா தலைமையில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், 1வது மண்டலத் தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், மாநகர தி.மு.க., செயலாளர் சுப்ரமணியம் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.