ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரிபாஸ்கர். இவர் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் இவரது மனைவி லோகித் சோனாலி. இவர்களுக்கு ஆதிரன் என்கிற 3மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் குழந்தை ஒன்று புகைப்படங்களை காண்பித்து சரியாக அடையாளம் சொல்லும் நினைவாற்றல் பிரிவில் நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை புரிந்த விவரத்தை ஊடகங்கள் மூலம் அறிந்த லோகித் சோனாலி, தனது குழந்தை ஆதிரனுக்கு புகைப்படங்களை அவ்வப்போது காண்பித்து குழந்தையின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாராம். இதை தொடர்ந்து ஒரு கட்டத்தில்,பழங்கள்,காய்கறிகள்,எண்கள்,வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை 3 மாத குழந்தை ஆதிரன் சரியாக அடையாளம் காண்பிக்க அதனை வீடியோவாக எடுத்து நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார் லோகித் சோனாலி. இதில் நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் புகைப்படங்களை நினைவாற்றல் செய்யும் குழந்தைகளுக்கான பிரிவில் குழந்தை ஆதிரன் வெற்றி பெற்றுள்ளார். இச்சாதனைக்காக 3 மாத குழந்தை ஆதிரனுக்கு நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தை ஆதிரனின் தாயார் லோகித் சோனாலி கூறுகையில், புகைப்படங்களை பார்த்து அடையாளம் சொல்லுவதற்காக குழந்தை ஆதிரனுக்கு 10தினங்களில் அவ்வப்போது புகைப்படங்களை காண்பித்து பயிற்சி கொடுத்ததாக தெரிவித்தார்.
சாதனை படைத்த 3 மாத குழந்தை..!
Shares: