தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுவதையடுத்து, ஜவுளிகள் வாங்க ஈரோடு கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக , ஐவுளிகள் வாங்க வெளியூரிலிருந்து ஈரோடு வருபவர்களும் அதிகளவில் உள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி, ஜவுளிகள் வாங்கவும் விற்பனை செய்யவும் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ரயில்கள் மூலம் ஈரோடு வருகின்றனர். இது தவிர, தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் ரயில்களில் ஈரோடு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) கடந்த நான்கு நாட்களாக இயங்காமல் பழுதாக இருப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த நகரும் படிக்கட்டை விரைவில் பழுது நீக்கி சீரமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
ஈரோடு ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது :பயணிகள் அவதி
Shares: