நம்மூர்

தள்ளுபடி விலையில் துணிகள் விற்பனை:ஈரோடு ஜவுளிக் கடைகளில்குவிந்த பொதுமக்கள்

தீபாவளி விற்பனைக்காக ஈரோட்டில் உள்ள அனைத்து ஜவுளி நிறுவனங்களும் புதுப்புது விதமான ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்தனர். இந்த நிலையில் தீபாவளிக்கு விற்பனையாகாத துணி வகைகளை ஸ்டாக் க்ளிரன்ஸ் செய்வதற்காக தீபாவளிக்கு மறுநாள் ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகளில் அனைத்து வகை துணிகளும் 50 சதவீதம் தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதன்படி , தீபாவளிக்கு மறுநாளான இன்று (நவ.1) ஈரோடு ஆர்கேவி சாலை கடை வீதியிலுள்ள ஜவுளிக்கடைகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதல் ஜவுளி ரகங்களை வாங்க குவிந்தனர். அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இந்த தள்ளுபடி என்பதால் ஈரோடு மட்டுமின்றி கரூர் , நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் ஈரோடு ஜவுளிக் கடைகளில் 50 சதவீத தள்ளுபடியுடன் கூடிய புதிய துணிகளை வாங்க வந்திருந்தனர்.