ஈரோட்டில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கான சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பொருட்களின் ஏற்றுமதி குறித்த பயிற்சி மற்றும் உற்பத்தியாளர்கள்-வணிகர்கள் இணைப்பு கூட்டத்தை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு தொகுதி எம்.பி., கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்