நம்மூர்

அவல்பூந்துறை பேரூராட்சியில்

ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில்

வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி, செப் 12: அவல்பூந்துறை பேரூராட்சியில் குடிநீர், தார் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவரும், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் பூமி பூஜையிட்டு கம்பெனியை தொடங்கி வைத்தார்.அவல்பூந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 2, 3, 7, 10, 13, 15 ஆகிய வார்டுகளில் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுதல், தார் சாலை அமைத்தல், குடிநீர் பைப் லைன் அமைத்தல், கழிப்பிட கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவரும், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சு.குணசேகரன் தலைமை தாங்கி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் ராதாமணி பாலசுப்பிரமணியம், செயல் அலுவலர் சசிகலா, அவல்பூந்துறை பேரூர் கழகச் செயலாளர் சாமியப்பன் என்கிற சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயற் பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் கனகராஜ், தேவி, சுலோச்சனா, ராஜேந்திரன், சோமசுந்தரம், ராஜதுரை, வார்டு நிர்வாகிகள் பொன்னுசாமி, ராஜேந்திரன், சந்திரசேகரன், பிரதீபன், சக்திவேல், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்