ஈரோடு ரங்கம்பாளையம் அருகே உள்ள முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ் 7ல் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அரவை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கினை மாநகராட்சி ஆணையர் டாக்டர் மனிஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டு, குப்பை அரவை கிடங்கு செயல்படும் விதம், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான அடிப்படை வசதி போன்றவை குறித்தும், இருப்பு வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி தூய்மை பணிக்கான உபகரணங்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் இயங்கும் மாநகராட்சிக்கு சொந்தமான அறிவியல் பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ஜாகீர் ஆகியோர் உடனிருந்தனர்.