சென்னிமலை அருகே நேற்று நடந்த பூப்பறிக்கும் விழாவில் கிராமத்து பெண்கள் வனப்பகுதிக்கு சென்று பூப்பறித்து வந்தனர். சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலுக்கு மறு நாளான தை மாதம் 2-ந் தேதி பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு தை பொங்கலுக்கு மறு நாளான நேற்று (புதன்கிழமை) சென்னிமலை அருகே தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூர், தோப்புப்பாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்குள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அவர்களுக்கு துணையாக ஆண்களும் சென்றனர்.முன்னதாக காலை 10 மணியளவில் தங்களது வீடுகளில் இருந்து கரும்பு மற்றும் இனிப்பு, கார வகைகளை எடுத்து கொண்டு சென்றனர். அங்கு அனைவரும் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த தின் பண்டங்களை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் மாலை 3 மணியளவில் அங்கிருந்து பாட்டு பாடியபடி தங்களது வீடுகளுக்கு சென்றனர்.அதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் கோலமிட்டு ஏற்கனவே கடந்த 1 மாதமாக சாணத்தால் பிடித்து வைத்திருந்த பிள்ளையார் மற்றும் கரும்பு, மஞ்சள் செடி ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.சென்னிமலை நகர பகுதியில் இருக்கும் பொதுமக்கள் சென்னிமலையின் தெற்கு பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு பூப்பறிக்க செல்வது வழக்கம். ஆனால் அங்கு சரியான பாதை வசதி இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக பூ பறிக்க செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இன்று (வியாழக்கிழமை) காலையில் பெண்கள் ஏற்கனவே பிடித்து வைத்த பிள்ளையாரை வீடு அருகிலேயே உள்ள நீர்நிலைகளில் விடுகிறார்கள்.தை பொங்கலுக்கு மறுநாள் சென்னிமலை பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்காக பொங்கல் வைப்பது வழக்கம். ஆனால் தற்போது பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்த்து வருவதால் குறைந்த அளவிலான விவசாயிகள் மட்டும் நேற்று மாட்டுப்பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலுக்கு மறு நாளான தை மாதம் 2-ந் தேதி பூப்பறிக்கும் திருவிழா
Shares: