நம்மூர்

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில், தி.வி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில், தி.வி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். வெளியீட்டுச் செயலாளர் இளங்கோவன் கருத்துரையாற்றினார்.
இதில், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கிறது. இந்திய பன்முகத்தன்மைக்கு எதிரானது. சனாதன தர்மக் கொள்கையைத் திணக்கிறது என கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், தமிழகத்துக்கான நிதி உரிமையைப் பறிக்காதே என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.