ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோஜாக்) சார்பில் இவ்வமைப்பின் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முத்துராமசாமி பங்கேற்று உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்