Uncategorized

திம்மராயப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே
கீழ் முடுதுறை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திம்மராயப் பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் யாகசாலை, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மானம் மகா தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை நான்காம் கால யாக பூஜை உடன் விசேஷ சாந்தி, நாடி சந்தனம், 108 திரவியங்களால் ஹோமம், பூர்ணாஹுதி,யாத்ர தானம் முதலியவைகள் நடைபெற்றன.
பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் விமான கோபுரம் நோக்கி புறப்பட்டது. பின் திம்மராய பெருமாள் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் சூரிய பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு திரளான பக்தர்களுக்கு புனிதநீர…
[12:26 PM, 9/8/2024] Kkr Ravi: நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு படிப்பவர்களுக்கு இலவச பயிற்சியுடன், அரசின் ஊக்கத்தொகை ரூ.7,500 பெறுவதற்கான மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது ஈரோட்டில் 2 மையங்களில் 658 பேர் எழுதினர்….

தமிழகத்தில் நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது கடந்த ஆண்டு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினால் துவங்கப்பட்டது. நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்விற்கு தயாராகி வருபவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்தி, அதில், 1000 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், நடப்பாண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்கள் ஊக்கத்தொகை மற்றும் இலவச பயிற்சி பெற நான் முதல்வன் மதிப்பீட்டு தோ்வானது மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வில் 658 பேர் பங்கேற்று தேர்வினை எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினரும், அரசு தேர்வுகள் துறையினரும் ஏற்பாடு செய்தனர்….