ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒரு நாளைக்கு 200 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகின்றன. நிரந்தர பணியாளர்கள், தினக்கூலி மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என 1,700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், தூய்மை பணியாளர்களால், திட்டமிட்டப்படி சாலைகள், தெருக்கள், குடியிருப்புகளில் குப்பைகளை சேரிக்க முடியவில்லை. அதனால், மாநகராட்சியில் பல குடியிருப்புகள், தெருக்களில் குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்தும், சிதறியும் கிடக்கின்றன. மக்கள் அந்த சாலைகள், தெருக்களில் நடந்து செல்லவே முடியவில்லை. மழை பெய்தால் குப்பைகள் மழையில் நனைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு, குப்பை சேகரிக்கும் வாகனங்களில் இருந்து, அவற்றை எடுத்து வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கு மற்றும் பிற உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லும் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறையே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி பொறியாளர் சோமசுந்தரம் கூறியதாவது : ஈரோடு மாநகராட்சியில் குப்பை அள்ளப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பற்றாக்குறை நிலவுவது உண்மை தான். 185 வாகனங்களுக்கு 155 வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதிலும், 10 முதல் 15 வாகனங்கள் பழுதடைந்துள்ளன. சில வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் உள்ளன. இதனால், குப்பை அள்ளும் பணியில் சுணக்கம் உள்ளது. ஓரிரு மாதங்களில், பற்றாக்குறையாக இருக்கும், 30 வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும் போது, குப்பை அள்ளும் பணியில் தொய்வு ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்
- Home
- Uncategorized
- ஈரோடு மாநகராட்சியில்குப்பை அள்ளும் வாகனங்கள் பற்றாக்குறை