தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று (டிச.5), அதிமுக கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஈரோட்டில் கட்சியின் மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் அம்மா மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு ,முன்னாள் அமைச்சரும் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல, பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள ஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு மற்றும் வி.பி.சிவசுப்பிரமணி , ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்