அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் அனைத்து ஊராட்சி பேரூராட்சி மற்றும் வார்டு பகுதிகளில் அதிமுக கொடியினை ஏற்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்புகளை வழங்கி கொண்டாடிவருகின்றனர், அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகளுடன் கச்சேரி மேடு பகுதியில் உள்ள கழக கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினார், அதனை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும் கழக நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களுடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார் இதில் கழகத் தொண்டர்கள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னாள் முதல்வர்களின் உருவ படங்களுக்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிளார்
Shares: