மத்திய , மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உலக ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டம், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாவட்ட தலைவர் மணி பாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் கிரிஜா சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், ஓய்வூதியர் சங்க கோட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.