ஆன்மீகம்

சென்னிமலை முருகன் கோயிலில்கந்தசஷ்டி விழா:நவ.2 ல் துவங்குகிறது

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா அடுத்த மாதம் 2ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி,அன்று காலை 6.30 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இருந்து வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கு காலை 9 மணிக்கு யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. பின்னர் பகல் 12 மணிக்கு மகா தீபாரதனையும் அதனைத் தொடர்ந்து , பகல் 1.30 மணிக்கு வள்ளி – தெய்வானைக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவு நாளான நவம்பர் 7-ம் தேதி வரை 6 நாட்களும் தொடர்ந்து நடைபெறுகிறது. நிறைவு நாளான 7-ம் தேதி மாலையில் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் படிக்கட்டுகள் வழியாக அடிவாரத்திற்கு அழைத்து வரப்படும் நிகழ்ச்சியும், அன்று இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது