சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவமனை சந்திப்பில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர்.அப்போது தொழிலாளர் சங்கத்தின் அங்கீகாரம் மறுக்கும் சாம்சங் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடும் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.மேலும் தமிழக அரசு சாம்சங் தொழிலாளர்களின் உரிமை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்..
ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Shares: