ஈரோடு எஸ்கேஎம் பூர்ணா நிறுவனத்தின் ரைஸ் பிரான் ஆயிலின் தரத்தை மேம்படுத்த நவீன இரட்டை சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, அதன் தொடக்க விழா நடைபெற்றது.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு எஸ்கேஎம் அனிமல் ஃபிட்ஸ் அண்ட் ஃபுட்ஸ்(இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளாக கால்நடை மற்றும் கோழித் தீவனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தொடர்ந்து, எஸ்கேஎம் பூர்ணா என்ற பெயரில் தனி நிறுவனம் துவங்கி கடந்த 18 ஆண்டுகளாக பல வகையான சமையல் எண்ணெய்களை தயாரித்து, சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதில், பூர்ணா ரைஸ் பிரான் ஆயில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், எஸ்கேஎம் பூர்ணா ரைஸ் பிரான் ஆயிலின் தரத்தை மேம்படுத்தும் வகையில், எஸ்கேஎம் பூர்ணா நிறுவனத்தில் நவீன இரட்டை சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு இயந்திரத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்கேஎம் பூர்ணா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகர் தலைமை தாங்கி இயந்திரத்தை துவக்கி வைத்தார். நிறுவனத்தின் இயக்குநர் சியாமளா ஷர்மிலி, செயல் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து இந்நிறுவனத்தார் கூறுகையில் “இந்த நவீன இரட்டிப்பு சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் ரைஸ் பிரான் ஆயிலின் நிறம் மேம்படுவதுடன், அதிலுள்ள நுண் ஊட்டச்சத்துக்கள்(ஒரைஜனல் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்) பாதுகாக்கப்படும். மருத்துவர்களால் ரைஸ் பிரான் ஆயில் சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது ” என்று தெரிவித்தனர்
எஸ்.கே.எம். பூர்ணா ரைஸ் பிரான் ஆயில் தரத்தை மேம்படுத்தநவீன இரட்டை சுத்திகரிப்பு இயந்திரம்
Shares: