நம்மூர்

வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்பொங்கல் விழா

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் , இக்கல்லூரியின் 25 ஆம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மான் கொம்பு ஆட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பொது பொங்கல் வைத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் போட்டி நடைபெற்றது.மேலும் , வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், கும்மி அடித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதன் பின் உரியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், தலைவர் சி.ஜெயக்குமார், அறக்கட்டளை உறுப்பினர்களான சி.பாலசுப்பிரமணியன் மற்றும் எம். யுவராஜா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்