கோபிசெட்டிபாளையம் பச்சமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த சனிக்கிழமை (நவ.2) தொடங்கி அன்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று (நவ.7) காலை ஹோமம், அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து பச்சமலை கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய வீதிகளான புதுப்பாளையம்,கோபி சிக்னல், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று பாரியூர் பிரிவு பகுதியில் நிறைவடைந்து , அங்கு சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்