உலக சுற்றுலா தினவிழா- 2024- ‘ ஐ முன்னிட்டு, ‘சுற்றுலா மற்றும் அமைதி ‘ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.