சில பேர் எப்போ காபி குடிச்சாலும் உடனே போய் சூட்டோடு சூடாய் பல் துலக்கிட்டு வர்ரதை வாடிக்கையாக வெச்சிருப்பாங்க. அவங்களுக்கு தான் இந்த நியூஸ்..
எப்பவுமே காபி குடித்த உடனேயே பல்லை ‘ பிரஷ்’ செய்யக் கூடாது. ஏனென்றால், குடித்திருக்கும் காபியில் உள்ள அமிலத்தன்மை (அசிடிட்டி) பல் எனாமலை தற்காலிகமாக பலவீனப்படுத்தியிருக்கும். அந்த சம்யத்தில் அதாவது எனாமல் ரொம்பவும் ’ சாஃப்ட்’ ஆகி (மென்மைப்பட்டு) இருக்கும் அச்சமயத்தில் , காபி குடிச்ச கையோடு பல்லை பிரஷ் செய்தால் அது பல் எனாமலின் இந்த பாதிப்பை மேலும் கூடுதலாக்கி, பல் எனாமல் அரிப்புக்கும் ஏற்படக்கூடும் அத்துடன் பற்களில் கூச்சம் மற்றும் சொத்தைக்கும் வழி வகுக்கக்கூடும். எனவே காபி குடித்து குறைந்தது 30 நிமிடங்களாவது கழிந்த பிறகு பல் துலக்கலாம் என பல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்
காபி குடிச்ச கையோடுபல் துலக்குபவரா..நீங்க…?
Shares: