ஈரோடு மாநகராட்சி 4 -ம் மண்டலம் 38வது வார்டில் உள்ள குயிலான் காடு பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூர் வாரும் பணியை, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், மாநகர பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்