வனப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் வராமல் தடுக்க வனப்பகுதியை சுற்றி இரும்பு தண்டவாளம் அமைக்க வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள், தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜீரஹள்ளி மற்றும் தாளவாடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகளால் தாங்கள் விளைவிக்கும் பயிர்கள் சேதம் அடைகிறது. எனவே, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதியை சுற்றி இரும்பு தண்டவாளம் அமைக்க வேண்டும் ; நெய்தலாபுரத்தில் இருந்து தலமலை, மாவல்லம் முதல் குளியாடை வரை நிலத்தடி மின் கம்பிகள் அமைக்க வேண்டும் ; மாவல்லம், தேவர்நத்தம், குளியாடா கிராம மக்கள் குளியாடா-திம்பம் சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர், தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்