பல்சுவை

பாறுக் கழுகுகளை பாதுகாக்கவனத்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆண்டுதோறும் செப்டம்பர் மாத முதல் சனிக்கிழமை உலக பாறுக் கழுகுகள் தின மாக கடைப்பிடிக்கப்படுகிறது. இறந்த கால்நடைகளையும் காட்டு விலங்குகளையும் உண்ணும் வெண் முதுகுப் பாறுக் கழுகு, கருங்கழுத்துப் பாறுக் கழுகு, செம்முகப் பாறுக் கழுகு ஆகிய 3 வகை கழுகுகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மாயாறு சமவெளியில் காணப்படுகின்றன. சத்தியமங்கலம் நகரத்துக்கு அருகிலேயும், புதுவடவள்ளி மற்றும் டி. என். பாளையத்தி லும் இக்கழுகுகள் அண்மையில் அதிகளவில் தென்படுவதால் இவ்வகை கழுகுகள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது
இந்நிலையில்,பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றை பாதுகாப்பதில் வனத் துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பாறுக் கழுகுகளால் ஏற்படும் நன்மைகள், அவை அழிவுக்கான காரணம், இவற்றை அழிவில் இருந்து மீட்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கிராமங்களில் வனத் துறையினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, திம்பம்- மைசூரு சாலை யில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன